மலேசியாவில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர், ராணுவத்தினர் என சுமார் 66,000 பேர் நாடு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. மழைநீர் தேங்கியதால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. மலேசியாவின் மிகப்பெரிய துறைமுகமான கிளாம் துறைமுகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழை காரணமாக, மலேசிய நாட்டு மக்களின் இயல்பு நிலை கடுமையாகப் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் செல்லும் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
எனினும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான 'VTL' விமான போக்குவரத்து, 'VTL' தரைவழி போக்குவரத்து எந்தவித இடையூறுமின்றி பயணிகள் தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.