தீவு நாடான டோங்கோ-வில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டதால் அத்தீவு நாட்டை சுனாமி தாக்கியது.
பசிபிக் பெருங்கடலையொட்டி உள்ள தீவு நாடு டோங்கோ. ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட டோங்கோ நாட்டில் பல்வேறு சிறு சிறு தீவுகள் உள்ளன. அத்தீவுகளில் நிலப்பரப்புகள் மீதும், கடலுக்கு அடியிலும் எரிமலைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் ஹூங்கோ டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதனையடுத்து கடலுக்கு அடியில் சுனாமி அலை உருவானதை அடுத்து தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
மீண்டும் தீவில் எரிமலை வெடிப்பு நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு, அதனைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.