Skip to main content

"தீவிரவாதிகளின் சரணாலயங்களை அகற்ற வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது" - காபூல் தாகுத்தலுக்கு இந்தியா கண்டம்!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

INDIA EXTERNAL AFFAIRS

 

இந்தியாவின் ஆண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றனர். அந்தவகையில் தீவிரவாதிகள், கடந்த சனிக்கிழமை காபூலில் தஸ்த் இ பர்ச்சி என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள பெண்கள் பள்ளி ஒன்றைக் குறிவைத்து பெரிய அளவிலான தாக்குதல் ஒன்றை நடத்தினர்.

 

முதலில், பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டு நிரம்பிய காரை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர். இதனால் மாணவிகள் பயத்தில் பதறியடி வெளியேற, தீவிரவாதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் உட்பட 85 பேர் உயிரழந்தனர். மேலும், 147க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

இந்தநிலையில், இந்தக் கொடூர தாக்குதலுக்கு இந்தியா தனது கடுமையான கண்டங்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "புனித ரமலான் மாதத்தில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி பெண் மாணவர்களைக் கொன்ற, சயீத் அல்-சுஹாதா பெண்கள் பள்ளி மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இளம் பெண் மாணவர்களைக் குறிவைப்பது ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் மீதான தாக்குதலாக அமைகிறது. குற்றவாளிகள் தெளிவாக, கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மக்கள் உருவாக்கிய, கடுமையாக போராடி வென்ற சாதனைகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத சரணாலயங்களை அகற்றுவதற்கான அவசரத் தேவையையும், சமாதான முன்னெடுப்புகளை அர்த்தமுள்ளதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு நாடு தழுவிய ஒரு போர் நிறுத்தத்தையும் வலியுறுத்துகிறது" என கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்