Published on 23/04/2021 | Edited on 23/04/2021

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ்களும் பரவி வருகிறது. பாகிஸ்தானிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களில் ஊரடங்கை அமல்படுத்த அந்த நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது கனடா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது. இன்று (23.04.2021) முதல் 30 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்குமென கனடா அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகளில் பலருக்கு கரோனா உறுதியாவதால், இந்த நடவடிக்கையை கனடா அறிவித்துள்ளது.
ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியப் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.