சிலநாட்களுக்கு முன்னர் வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் அந்நாட்டின் புனிதமான சிகரமாக கருதப்படும் மவுண்ட் பைக்டு சிகரத்திற்கு வெள்ளை குதிரையில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சவாரி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
வடகொரியாவில் கடந்த 70 ஆண்டுகளாக, கிம் குடும்பத்தினரின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன வெள்ளைக்குதிரைகள். அதுமட்டுமல்லாமல் கிம் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் வெள்ளை குதிரையில் இந்த சிகரத்திற்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 2013 அவரது சொந்த மாமாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முன்னும், அதேபோல தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் முன்னும் கிம் இந்த சிகரத்திற்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தற்போது அவர் அந்த சிகரத்திற்கு குதிரையில் சென்று வந்துள்ளதற்கு பின்னால் மிக முக்கியமான காரணம் இருக்கும் என எதிர்நோக்கியுள்ளனர் அந்நாட்டு மக்கள்.