Skip to main content

ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி மறுத்த பிரேசில்!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021
sputnik

 

 

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ள. ரஷ்யா ஸ்புட்னிக் V என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகளில் அனுமதிக்கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

 

அந்தவகையில் பிரேசில் நாட்டிலும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரேசில் நாட்டு பிரேசிலிய சுகாதார ஒழுங்குமுறையாளர் அன்விசா, இந்த தடுப்பூசிக்கு அனுமதி மறுத்துள்ளது. உள்ளார்ந்த அபாயங்கள், கடுமையான குறைபாடுகள் உள்ளதாக கூறி இந்த தடுப்பூசி நிராகரிக்கப்படுவதாக பிரேசிலின் சுகாதார ஒழுங்குமுறையாளர் அன்விசா தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் பாதுகாப்பு, தரம், செயல்திறன் குறித்த தகவல்கள் போதுமான அளவு இல்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

அதேநேரம் வெளிநாட்டில் ஸ்புட்னிக் V தடுப்பூசியை தயாரிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு, பிரேசில் சுகாதார ஒழுங்குமுறையாளரின் கருத்துக்களை நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு, ஸ்புட்னிக் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை 61 நாடுகள் மதிப்பிட்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன என தெரிவித்துள்ளதோடு, இதற்கு பின்னால் அரசியல் இருக்கலாம் என கூறியுள்ளது. மேலும் ரஷ்ய தடுப்பூசிக்கு சில நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து வருந்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு அவரசகால அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முதல் பேட்ச் மே ஒன்றாம் தேதி இந்தியா வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்