நாய்களின் கலருக்கும் அவற்றின் ஆயுளுக்கும் என்னய்யா தொடர்பு என்று கேட்கத் தோன்றும். இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இங்கிலாந்தில் மிகவும் விரும்பப்படும் லேப்ரடார் நாய்களை ஆய்வு செய்ததில் சாக்லெட் கலர் நாய்களின் ஆயுள் மற்ற கலர் நாய்களைவிட மிகவும் குறைவு என்று கண்டறிந்துள்ளனர்.
விலங்குகள் குறித்து ஆய்விதழ் ஒன்றில் இது வெளியாகி இருக்கிறது. லேப்ரடார் நாய்கள் பொதுவாக அடிக்கடி குட்டிகளை ஈனுகின்றன. இதன் காரணமாக, உடல்பருமன், செவிப்பாதிப்பு போன்ற குறைபாடுகளால் உயிரிழக்கின்றன என்பதை கண்டறிந்தனர். இதற்காக 33 ஆயிரம் வகை லேப்ரடார் நடவடிக்கைகளில் இருந்து தேர்வுசெய்த 2 ஆயிரம் லேப்ரடார்களை ஆய்வு செய்தார்கள்.
இங்கிலாந்தில் உள்ள லேப்ரடார்கள் மட்டும்தான் இந்த ஆயுள் குறைபாடுக்கு ஆளாகின்றனவா, இல்லை எல்லா நாடுகளிலும் இதே நிலைதானா என்று இப்போது ஆய்வை நீடித்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள லேப்ரடார் நாய்களை ஆய்வுக்கு எடுத்திருக்கிறார்களாம்.