Published on 26/10/2018 | Edited on 26/10/2018
ஜப்பானிலுள்ள ஹொக்காய்டோ பகுதியில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருக்கும் கட்டிடம் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தால் உயிர்பலி இல்லை என்றும், சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும் ஜப்பான் ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஜப்பனிலுள்ள ஒகினோவா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியது. இந்த விபத்திலும் எந்தவித சேதாரமும் எச்சரிக்கையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.