![The Vice-Chancellor congratulated the Annamalai University team players who won the football match](http://image.nakkheeran.in/cdn/farfuture/_KDOIcRXZGVtSFva4D6b8D78uvAFO64CYPQzpjWkVO4/1674391482/sites/default/files/inline-images/n223057.jpg)
அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டிகள் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்றது. இதில் மண்டல போட்டிகளில் வெற்றி பெற்ற 16 பல்கலை அணிகள் பங்கேற்று விடையாடின. தென்மண்டல போட்டிகளில் வெற்றிபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உட்பட 4 தமிழக பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் குரு நாக்தேவ் பல்கலைக்கழகத்துடன் ஒரு கோல் கணக்கில் தோல்வியுற்றது. பின்னர் தொடர்ந்து புள்ளிகளின் அடிப்படையில் அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் 3-ம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
இப்போட்டிகளில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற பல்கலைக்கழகங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வீராங்கனைகள், பயிற்சியாளர், இயக்குநர் ஆகியோரை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.