![Father stabs 17-year-old boy who spoke to his daughter to phone](http://image.nakkheeran.in/cdn/farfuture/tr7_pe-_kin1I5H6xuUf83cmqDNNGQOrXD5EZ5PFI4k/1739604704/sites/default/files/inline-images/stabn_0.jpg)
மகளிடம் போனில் பேசியதற்காக 17 வயது சிறுவனை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், பாவ்நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் ரச்சாத். இவருடைய மகளுடன், 17 வயது சிறுவன் ஒருவர் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், ஜெகதீஷுக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி ஓஏஜே எனும் அறிவியல் நிறுவனத்தில் உள்ள ஆலோசனை அறையில் அந்த சிறுவனை அழைத்து ஜெகதீஷ் பேசியுள்ளார். இந்த அறையில், ஆசிரியர் ஒருவரும், ஜெகதீஷின் மகளும் இருந்துள்ளனர்.
அப்போது ஜெகதீஷ், தனது மகளிடம் பேச வேண்டாம் என்று அந்த சிறுவனிடம் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவனை பலமுறை குத்தினார். இதில், அந்த சிறுவன் பலத்த காயமடைந்தா. பள்ளி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, ஜெகதீஷை ஆலோசனை அறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெகதீஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, ஜெகதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை, கத்தியால் குத்தியால் குத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.