![Hindu Front came with a thali to marry a lover in karaikudi](http://image.nakkheeran.in/cdn/farfuture/fm-1NhuxZAaOiFNqhQBvuYo4gaVPkKyuWLjwkvodSaE/1739599540/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_271.jpg)
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இதனையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேக்கரி கடை ஒன்று காதலர்களுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர், ‘ கடைக்கு வரும் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்போம்’ என்ற ரீதியில் காதலர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அறிவித்தபடியே இந்து முன்னணி அமைப்பின் பொறுப்பாளர்கள் சில தாலியுடன் கடைக்கு வந்திருந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக இந்து முன்னணி அமைப்பினரை சேர்ந்த மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ராஜா, தேவகோட்டை நகரத் தலைவர் சுரேஷ்(தாலியுடன் வந்தவர்), தேவகோட்டை நகரப் பொதுச்செயலாளர் மாரியப்பன், காரைக்குடி நகரத் தலைவர் கார்த்திகேயன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.