Skip to main content

செலவு பணத்தை கொடு.. சாவிகளை ஒப்படைக்க திரண்ட அங்கன்வாடிப் பணியாளர்கள்

Published on 15/06/2018 | Edited on 15/06/2018
av

   அங்கன்வாடிப் பணியாளர்கள் பொறுத்து பொறுத்து பார்த்துலிட்டு தாங்கள் வேலை செய்யும் அங்கன்வாடி மையங்களின் சாவிகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க திரண்டுவிட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


      அங்கன்வாடி குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு, மாவு, முட்டை கொடுக்கும் அரசு.. அதை சமைத்துப் போட காய்கறி, விறகு, கேஸ் பில் கொடுத்து ரொம்ப மாதங்கள் கடந்துவிட்டது. பல மாதங்களாக எங்கள் செலிவினங்களை கொடுங்கள் ஓரளவுக்கு மேல் எங்களால் தாங்க முடியா என்று கேட்டுப்பார்த்தார்கள். அரசு அதிகாரிகள் யாரும் செவிசாய்க்கவில்லை. 
   காய்கறிகடையில் கணக்கு ஏறியது. அதனால் காய்கறி வாங்க முடியல என்றனர். அதிகாரிகள் அரசாங்கம் பணம் அனுப்பலை வந்ததும் தருவோம் அதனால கடன் வாங்கி போடுங்க என்றனர். பலன் இல்லை.


  இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலகம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான அங்கன்வாடிப் பணியாளர்கள் செலவின தொகையை கொடு, எங்களில் மூத்தவர்களை பணி உயர்வில் அங்கன்வாடிப் பணியாளர் ஆக்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி அங்கன்வாடிச் சாவிகளுடன் வந்து சாவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவிகளை வாங்கிக் கொள்ள எந்த அதிகாரியும் வரவில்லை. எப்ப தான் எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.
 

சார்ந்த செய்திகள்