Skip to main content

திருமணமான மூன்றே மாதங்களில் வாலிபர் தற்கொலை; போலீஸ் விசாரணை

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Sennimalai incident;Police investigation

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயது ரவிக்குமார். கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கடந்த 12ந் தேதி மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார் மது அருந்திவிட்டு ஊரில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்படியே  அங்குள்ள அறைக்கு தூங்கச் சென்றுவிட்டார்.

 

இந்த நிலையில், நேற்று காலை ரவிக்குமாரின் உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்துள்ளது. வேறு அறையில் ரவிக்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு கீழே இறக்கி வைத்தனர்.

 

இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உலக போதை ஒழிப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
World Anti-Drug Day; Students awareness rally!

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை ரெயில்வே எஸ்.பி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ரயில் நிலைய நடை மேடைகள் மற்றும் வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா, லட்சமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பாலமுருகன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில் “போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி திருச்சி ரெயில் நிலையம் மட்டும் இன்றி திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 மாவட்டங்களிலும் நடைபெற்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் 3 ரெயில்வே உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Next Story

ரவுடிகள் பட்டாக்கத்தியுடன் நடனமாடி ரகளை; சிக்கிய சிசிடிவி காட்சிகள்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
cannabis intoxicated raiders rampage near Chennai

சென்னை மணலி சாத்தாங்காடு பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பட்டாகத்தியுடன் சாலையில் நடனமாடி ரகளையில் ஈடுபட்டனர். அத்தோடு, ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை தூக்கிச் சென்று தங்களுடன் நடனம் ஆடுமாறு மிரட்டியதால் அந்தச் சிறுவன்  கும்பலிடம் இருந்து தப்பி தலைத் தெறிக்க வீட்டிற்கு ஓடி உள்ளான்.

மேலும் போதைத் தலைக்கேறிய நிலையில் ரவுடி கும்பல் அவ்வழியாக வந்த இரு சக்கர ஊர்திகளில் செல்படுபவர்களை வழிமறித்து அவர்களை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரவுடிகள் நடத்திய அராஜகத்தால் அப்பகுதியே பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து மணலி சாத்தாங்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த நிலையில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதின் மூலம் சமூக விரோதிகளின் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது, இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், அரசும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் கஞ்சா சாகுபடி செய்யவும் சமூக விரோதிகள் தயங்க மாட்டார்கள் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.