சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிறுவனர் ரஜினிகாந்த் தனது மன்ற உறுப்பிர்களுடன் கடந்த ஒரு மணி நேரமாக ஆலோசனை நடத்திவருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்து கட்சி ஆரம்பிக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளர். அண்மையில், டிசபம்பரில் கட்சி அறிவிப்பு இல்லை ஆனால் கட்சிக்கான பணிகள் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. நேரம் பார்த்து கட்சி பற்றி ஆரம்பிப்பேன் என கூறியிருந்தார். ஆனால் பணம் உள்ளவர்களுக்கே பதவி வழங்கப்படுகிறது என ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் சிலர் ரஜினி வீட்டின் முன் ராஜினாமா கடிதத்துடன் முற்றுகையிட்டனர்.
இப்படி பல பரபரப்பு நிகழ்வுகளுக்கு பிறகு ரஜினி அண்மையில் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், ரசிகராக இருப்பது மட்டும் கட்சியில் முக்கிய இடம் பிடிக்க போதுமான தகுதி இல்லை. நல்லது செய்யும் நோக்கோடு பணம், பதவி ஆசை இல்லாமல் வரும் பொதுமக்களுக்கும் கட்சியில் இடம் கொடுக்கவேண்டும், மன்ற நிர்வாகிகள் நீக்கம் அனைத்தும் என் பார்வையில்தான் நடைபெற்றது என்ற கருத்துக்களுடன் அந்த கடிதம் வெளியானது. இவ்வளவு நிகழ்வுகளுக்கு பிறகு தற்போது நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.