Skip to main content

’30 சதவீதம் கமிஷன் கேட்டார்!’-ஓபிஎஸ் மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு!!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 


தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

ev

 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வேட்புமனுவை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பெற்றுக்கொண்டார். 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,  ’’தேனி மாவட்டத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதை 20 வருடங்களாக பிராட் கேஜ் பாதையாக மாற்றப்படாமலே உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கியும், பல காண்ட்ராக்டர்களிடம் இந்தப்பணிகள் ஒப்படைக்கப்பட்டும் இன்னும் பணிகள் நிறைவேறாமல் இருக்கக் காரணம், தேனியைச் சேர்ந்த அமைச்சர் தான். எனக்குத் தெரிந்த ஆந்திரா காண்ட்ராக்டர் கூறும் போது, தேனி அமைச்சர் 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார் என்றார். அதனால் தான் தேனி மாவட்டம் ரயில் இல்லா மாவட்டமாக உள்ளது. நான் தேனி எம்.பி .யாக ஆனால், 6 மாதத்தில் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு தேனிக்கு ரயில் வரவழைப்பேன்" என்றார்.

 

ev

 

 தேனி அமைச்சர் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மறைமுகமாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.  சிலர் பிஞ்சிலே பழுத்தது போல இருக்கிறார்கள். நான் மரத்திலேயே பழுத்து கனிந்தவன் என மறைமுகமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரைத் தாக்கிப் பேசினார். 

 

நீங்கள் தேனிக்குப் புதுமுகமாக இருக்கிறீர்களே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நடிகனாக இருந்தால் என்னை புதுமுகம் எனலாம். அரசியலில் தான் தேனிக்கு பழைய முகம்தான் என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்