![பக](http://image.nakkheeran.in/cdn/farfuture/TJ_B5oL-w0f95RvqWCupn2RIILAj6iwvybwCNHAHvfM/1660916247/sites/default/files/inline-images/ghjl_7.jpg)
குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலத்தில் அங்கு நடைபெற்ற ஹோத்ரா ரயில் நிலைய ரயில் எரிப்பு கலவரத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கொடூரமாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதுடன் அவரது வயிற்றிலிருந்த குழந்தையை எடுத்து எரித்துக் கொன்றனர் . மேலும் அவரது குடும்பத்தாரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றவாளிகளான 11 பேருக்கும் 2008ல் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஹோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு சிறப்புக் குழு அமைத்தது. அந்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின் படி ஆகஸ்ட் 15ல் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளின் விடுதலைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய நீதிபதி மிருதுளா பட்கர், " மக்களுக்கு நீதி வழங்குவதற்காகத்தான் உச்சநீதிமன்றம் உழைத்திருக்கிறது. ஆனால் மக்கள் ஏன் நீதித்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களின் விடுதலை என்பது அம்மாநில அரசின் நடவடிக்கை. இதில் நீதித்துறையை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றக்கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.