Skip to main content

தமிழக மின்துறையின் ஆதரவுடன் நிலக்கரி போக்குவரத்தில் 2500 கோடி ஊழல்-ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கம்!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

தமிழக மின்சார வாரியம் நிலக்கரி போக்குவரத்தில் 2500 கோடி மதிப்பில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை அறப்போர் இயக்கம் லஞ்சம் ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளது.

 

இந்த ஊழல் குறித்து அறப்போர் இயக்கத்தின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயராமன் எத்தகைய ஊழல் நடந்திருக்கிறது என்று விளக்கமளித்தார். தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்பட கூடிய நிலக்கரியை மகிநிதி, ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்களிலிருந்து விஷாகபட்டினம் துறைமுகம் வழியாக கொண்டுவரப்படுகிறது. இதற்காக டெண்டரை 2001 ஆம் ஆண்டு 5 மாதத்திற்கு சவுத் இந்தியா கார்பிரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. துறைமுகத்தில் நிலக்கரி இறக்குவதற்கு அங்குள்ள   கூலி ஆட்களை பயன்படுத்த துறைமுகத்தின் விதிப்படி கட்டணத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். அந்த கட்டணம் கட்டிய ரசீதை பயன்படுத்தி தமிழக மின்சார வாரியத்திடம் பணம் பெற்று கொள்ளலாம் என்பது தெளிவாக விதிகளில் குறிப்பிடபட்டு  இருக்கிறது. இதில் ஒப்பந்த தாரருக்கு மட்டும் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 24.05ரூபாயை மின்சார வாரியம் வழங்குகிறது.

 

arappor iyakkam

 

2011 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரை ஆண்டுக்கு 25 லட்சம் மெட்ரிக் டன் முதல் 35லட்சம் மெட்ரிக் டன் கொண்டுவரப்பட்டது. இதில் சவுத் இந்திய கார்பிரேஷன் நிறுவனம் கூலி தொகை மற்றும் அதன் வரியாக விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 239.56 கோடியை செலுத்தி இருக்கிறது. ஆனால் இதன் சவுத் இந்திய கார்பிரேஷன் நிறுவனம் விசாப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க கூலியாக 1267.6 கோடி செலுத்தியதாக மின்சார வாரித்திடமிருந்து 1267.6 கோடியை பெற்று இருக்கிறது. நிலக்கரி கொள்முதல் விதிப்படி துறைமுகத்தில் பணி செலுத்திய இரசீதையே வாங்காமல் ஒப்பந்த நிறுவனமும் மின்சார வாரிம தலைமை அதிகாரிளும் 1028 கோடி சுருட்டியுள்ளனர்.

 

arappor iyakkam

 

கடந்த 2001 முதல் 2016 வரை இது போன்ற மோசடி மூலம் குறைந்தபட்ச 2500கோடி தாண்டும். இந்த ஊழல் 2016 ஆம் ஆண்டு Tariff for major ports ல் துறைமுகத்திற்கும் மின்சார வாரியத்திற்கு Thermal Piece rate levy குறித்த வழக்கில் ஆதாரங்கள் வெளியாகி இருக்கிறது. 2001 ஆம் விடப்பட்ட டெண்டருக்கு பிறகு இது வரை டெண்டர் விடாமல் ஒரே நிறுவனத்திற்கு தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறார்கள். இது தொடர்பாக மத்திய தணிக்கை துறையும் இந்த ஊழலை சுட்டி காட்டி இருக்கிறார்கள்.

 

 

சவுத் இந்தியன் கார்பரேஷன் நிறுவனமான எம்ஏஎம் ராமசாமி நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமாகும். திமுக ஆட்சி காலத்தில் ஆர்காடு வீராசாமி அதிமுக ஆட்சி காலத்தில் தங்கமணி,ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பு இல்லை என்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.