![o. panneerselvam](http://image.nakkheeran.in/cdn/farfuture/YadCyvm7H0-_IwZ4Wq28p0HklPvC3xvcdKQFcrKSE9E/1646024727/sites/default/files/inline-images/62_24.jpg)
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலையை அபகரித்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அவருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜெயக்குமாரை சந்தித்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அரசியல் ரீதியாக சந்திக்க திராணி இல்லாததால் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், எதிர்க்கட்சிகளை அழித்துவிட திமுக கங்கணம் கட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.