முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அந்தந்த தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.