
இரட்டை இலை மற்றும் பொதுச் செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தடை ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
புகழேந்தி மீதும் மற்றவர்கள் மீதும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெற்றிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் இரு தரப்பினர் வாதங்களை கேட்டறிந்த பின் சென்னை உயர் நீதிமன்றம் தடை ஆணையை ரத்து செய்து தொடர்ந்து விசாரணை தொடர உத்தரவிட்டது. ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றினை சமர்ப்பித்தார். சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள ஆணையை சமர்ப்பித்து உடனடியாக அண்ணா திமுக இரட்டை இலை சம்பந்தமான வழக்கை தாமதமின்றி தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் மேலும் எடப்பாடி பழனிசாமி அணியைச் சார்ந்த சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை அது குமாஸ்தா (clerical job) வேலையை பார்க்க மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என இழிவாக பேசியுள்ளதையும் புகாராக குறிப்பிட்டு ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.