புதுச்சேரி மூலகுளத்தில் இயங்கிவரும் அமிர்தா வித்யாலயா பள்ளியில் குழந்தைகளுக்கு தரமான கழிவறை இல்லை, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவாக்குதல், ஆண்டுக்கு ஒருமுறை குறை, நிறைகளை கேட்டறிந்து பள்ளியின் வளர்ச்சிக்கு வழி வகுத்தல், கல்வி கட்டண குழு அமைத்து கல்வி கட்டணம் நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வைத்தனர்.
அதற்காக 60-க்கும் மேற்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் பதிவு தபாலில் மாற்றுச் சான்றிதழை அனுப்பி வைத்தது. இது குறித்து ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக இளம் சிறுவர்களுக்கு தபால் மூலம் மாற்று சான்றிதழ்களை அளித்து மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் முலகுளம் அமிர்தா வித்தியாலயம் பள்ளியின் சர்வாதிகார போக்கை கண்டித்து புதுச்சேரி ஆளுநர், முதல்வர் மற்றும் கல்வித்துறையிடம் நிதி கேட்கும் போராட்டத்தை பெற்றோர் சமூக அமைப்புகள் அறிவித்தன.
அதன்படி கல்வித்துறை அலுவலகம் முன்பாக பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.