Published on 27/11/2023 | Edited on 27/11/2023
![MRK Panneerselvam personally met and congratulated Minister Udhayanidhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/ytuBi5MvAJkm46kXxrJcFY2svh_ipQVzW46xD6AUdaI/1701083639/sites/default/files/inline-images/993-ashok_218.jpg)
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட கழக பொருளாளருமான எம்.ஆர்.கே.பி.கதிரவன் ஆகியோர் சென்னையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
![MRK Panneerselvam personally met and congratulated Minister Udhayanidhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/SHYyhRM0hjbpa0FFCSw0Cm-sgTTMV_EyCbiji7mDc9U/1701086203/sites/default/files/inline-images/993_339.jpg)
இதனையடுத்து, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் மற்றும் அவரது மகன் மருத்துவர் பிரவீன் ஐயப்பன் ஆகிய இருவரும் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வாழ்த்து பெற்றனர். இவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.