Skip to main content

“சாமியார் மீது உ.பி. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

MRK Panneerselvam condemn uttar pradesh priest

 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம்  இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்து தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

MRK Panneerselvam condemn uttar pradesh priest

 

விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக நிதி நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு அதை நிறைவேற்றி காட்டியுள்ளார். தொடர்ந்து விவசாயிகளின் உணர்வுகளையும் சூழ்நிலையும் கருத்தில் கொண்டு பல்வேறு நிதி நெருக்கடி வந்தாலும் முதலமைச்சர் விவசாயிகளுக்கு தனியாக நிதிகளை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

 

கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு திட்டங்களை அறிவிப்பதாக தேர்தல் வருவதற்கு முன்பாக வெற்று அறிக்கையை அறிவித்துவிட்டு சென்றுவிட்டார்கள். தற்போது திமுக ஆட்சி வந்த பிறகு அந்த திட்டங்களையும் விவசாயிகளுக்கு  நிறைவேற்றி காட்டியுள்ளார் நமது முதலமைச்சர். 

 

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவரை, ஒரு தனி நபர் சனாதனம் பேசியதற்காக தலையை வெட்டி விடுவேன் என்று கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். அங்கு குறிப்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசு அவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று தனிநபர் மிரட்டுவதற்கெல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் பயந்தது அல்ல” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்