Published on 28/03/2022 | Edited on 28/03/2022
மத்திய அரசு தனியார் மயம் கொள்கையை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர் தொழிற்சங்கத்தினர்.
திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக சென்று திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இப்போராட்டத்தில் திருச்சி மாவட்ட மாநகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.