Skip to main content

விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்; இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் 

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
More than 20 people were injured after being bitten by stray dogs

தமிழகம் முழுவதும் உரிமையாளர்கள் இல்லாத தெரு நாய்களால் நாளுக்கு நாள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இன்று திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என 20க்கும் மேற்பட்டோரை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியது. 

இதனைத் தொடர்ந்து, நாய் கடித்ததில் காயமடைந்த 15 பேர் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  திருக்கோவிலூர்  நகராட்சியில் தினசரி பொதுமக்களை நாய் கடிப்பதும், அதேபோன்று சாலையில் கால்நடை குறிக்கிடுவதால் வாகன விபத்துக்கள் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. 

இந்த நிலையில் இந்த நாய் கடி சம்பவம் நடைபெற்றுள்ளதால் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்