Skip to main content

மோடி சீன அதிபர் சந்திப்பு.... இளநீர் அருந்தியபடி ஐந்து ரதத்தில் உரையாடல்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

 

 

இன்று பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை மார்க்கமாக கார் மூலம் மாமல்லபுரம் வந்தடைந்த நிலையில் அவரை வரவேற்க வருகை தந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். 


 

 Modi meets Chinese President... Conversation in five chariots of drinking  Coconut water!

 


வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு அணிந்த படி மாமல்லபுரம் வந்தடைந்த மோடி. மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை வரவேற்றார். அர்ஜுனன் தபசு சிற்பங்கள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கிய பிறகு அங்கிருந்து நகர்ந்த அவர்கள் வெண்ணெய் உருண்டை பாறை உள்ள இடத்திற்கு நடந்து சென்றனர். 

 

அதன்பிறகு ஐந்து ரதம் பகுதியில் நடந்துகொண்டே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இருக்கையில் அமர்ந்த இருவரும் உரையாடியபடி இளநீர் பருகினர்.    

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்