சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கே.பி பெருமாள், மாவட்ட செயலாளர் ஜி.மாதவன். மாவட்டத்துணைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், சதானந்தம், சரவணன், மகாலிங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் குறித்தும் தேர்தலில் விவசாயிகளுக்கு தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் செய்த விளைவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.
விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கேடுவிளைவித்த மோடி தலைமையிலான மத்திய அரசை அகற்ற தமிழகத்திலுள்ள விவசாயிகள் திமுக தலைமையிலான அணிகளுக்கு வாக்கு அளிக்கவேண்டும். அதேபோல் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்ட மத்திய அரசை ஆதரித்த எடப்பாடி தலைமையிலான அரசை தூக்கி எறிய விவசாயிகள் அனைவரும் இந்த தேர்தலில் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.