அதிமுகவிற்கு கமலஹாசன் போன்றவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறினார், "தமிழக முதல்வர் பழனிசாமி திறம்பட ஆட்சியை நடத்திவருவதால்தான் அதன்மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ள மாற்றுக் கட்சியினர் பலரும் அதிமுகவில் இணைய தொடங்கியுள்ளனர்.
![Minister Kamaraj interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/V8YctXjEtVHfaY_MJ8MDE0EtckHvH05UusGKc4v3g0A/1575210066/sites/default/files/inline-images/dfdfgdggffgfgg.jpg)
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவும், அதிமுகவும் இணைந்து நாடகமாடி வருவதாக கமல்ஹாசன் தெரிவிப்பது வேடிக்கையானது, அவர்கள் தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக இதுபோன்ற கருத்துகளை அவ்வப்போது தெரிவிக்கின்றார். இதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதிமுகவுக்கு கமல்ஹாசன் போன்றவர்கள் ஒரு பொருட்டல்ல. அதிமுக எதார்த்தத்தை மக்களிடம் சொல்லி தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மக்கள் இயக்கம்." என்கிறார்.