Published on 10/02/2025 | Edited on 10/02/2025
![Vadalur police summon Seeman](http://image.nakkheeran.in/cdn/farfuture/D7Nlbm_U9hcnANoCB3EvnxZ4zsbi4zDjX_7KC8zy1dE/1739182579/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_250.jpg)
கடலூர் மாவட்டம் வடலூரில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியார் குறித்து அவதூறு வார்த்தைகளால் கடுமையாக பேசினார். இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரியார் இயக்கத்தினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு வடலூர் காவல்துறையினர் சம்மன் ஒன்று அனுப்பியுள்ளனர். அதில் வருகிற 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி குறிப்பிட்டுள்ளனர். சீமானுக்கு சமன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.