கனமழையால் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாட்களுக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதேபோல், நவம்பர் 10- ஆம் தேதி அன்று சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும், திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்வதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.