Published on 03/07/2023 | Edited on 03/07/2023
![heavy rain in nilgiri and coimbatore district so nrdf force came](http://image.nakkheeran.in/cdn/farfuture/vDHFsAFAq6yWDdcr1vebEDmWAfWszoNcAuJ19rDxFLI/1688352255/sites/default/files/inline-images/rain-1_3.jpg)
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரிக்கு விரைந்துள்ளனர்.
கடந்த சில ஒரு சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரிக்கு விரைந்துள்ளனர்.