Published on 13/04/2020 | Edited on 13/04/2020
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 25, ஏப்ரல் 30 வரையிலான மின் கட்டணத்தை மே மாதம் ஆறாம் தேதியில் செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.