44வது செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றின் முடிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் நேற்று (29/07/2022) நடைபெற்றது. இதில், ஓபன் பிரிவு மற்றும் மகளிர் பிரிவில் மொத்தமாக 342 அணிகள் பங்கேற்றனர். ஆறு அணிகளாக 24 வீரர்களுடன் களம் இறங்கிய இந்திய அணியில், அனைவரும் வெற்றி பெற்றனர். இதனால் புள்ளிப் பட்டியலில் இந்திய அணிகள் முதலிடத்தைப் பிடித்தனர்.
ஓபன் பிரிவில் இந்தியா ஓபன்- ஏ அணி முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பெயின், போலந்து, அஜர்பைஜான், நெதர்லாந்து, உக்ரைன், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா ஓபன்- 2 அணி, ஆர்மேனியா அணிகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இதேபோன்று, மகளிர் பிரிவில் இந்தியா மகளிர் அணி- A, உக்ரைன், ஜார்ஜியா, போலந்து, பிரான்ஸ், அஜர்பைஜான், அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்மேனியா, கஜகஸ்தான் அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.