ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பொதுமக்களிடமிருந்து முதலீடாக பெறப்பட்டு அதிக வட்டி தருவதாகச் சொல்லி மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதில் காந்தி சேகர் என்பவர் தேடப்படும் குற்றவாளியாகவும், அவரது நண்பர்களும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொழிலதிபரான அவர் படங்களிலும் நடித்து வரும் நடிகர் என்றும் கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததின் கீழ் ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி 40 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டதோடு, அவர் வீட்டிலிருந்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.