Skip to main content

'ஒவ்வொரு நாளுமே காதலர் தினம் தான்'-உதயநிதி ஸ்டாலின் பேச்சு   

Published on 14/02/2025 | Edited on 14/02/2025

 

'Every day is Valentine's Day' - Udhayanidhi Stalin's speech

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 30 இணையர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது. ந்த நிகழ்வில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''இன்று மிக மிக முக்கியமான நாள். காதலர் தினம் இதை சொன்னால் சிலருக்கு கோபம் வரும். அவர்கள் எல்லாம் காதலர் தினத்தைக் கொண்டாடக்கூடாது என்று சொல்வார்கள். காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளுமே காதலர் தினம் தான். அப்படிப்பட்ட முக்கியமான தினத்தில் இந்த திருமணத்தை நடத்தி வைக்கின்றோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்