தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அண்மையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. தொடர்ந்து உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக டிசம்பர் 16ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.