Published on 20/03/2023 | Edited on 20/03/2023
![Delay in aavin milk supply in Trichy!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mpy-hwkj91UatacuVilBlXtJvsAu1GzurnStiQyTCzA/1679291259/sites/default/files/inline-images/th-1_3709.jpg)
திருச்சி ஆவின் மூலம் 150க்கும் மேற்பட்ட பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 1.40 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பால் விற்பனை விலை உயர்வை தொடர்ந்து திருச்சி ஆவின் விற்பனை சராசரியாக 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி ஆவின் நிறுவனத்தில் பல மாதங்களாக முறையான பராமரிப்பு இன்றி இருக்கக்கூடிய இயந்திரங்கள் மற்றும் பால் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் முகவர்களுக்கு தாமதமாகவே பால் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பால் பதப்படுத்தக்கூடிய இயந்திரம் முறையாகப் பராமரிக்கப்படாததால் நேற்று இரவு இரண்டு இயந்திரங்கள் பழுதானதாகக் கூறப்படுகிறது. பால் விநியோகத்தில் தாமதம் காரணமாக முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.