Published on 25/05/2022 | Edited on 25/05/2022
![poonamallee incident Police investigation!](http://image.nakkheeran.in/cdn/farfuture/8E9Kk7GTGMAtUCsjW-BO8-ujQy3RCCLb6lboA_AQBUg/1653492594/sites/default/files/inline-images/m15_1.jpg)
சென்னை பூந்தமல்லி அருகே தலை, கைகள் இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் சடலத்தை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி அருகே கண்ணப்பாளையம் செல்லும் சாலையோரம் குப்பை கொட்டப்படுவது வழக்கம். அந்த குப்பைகள் சில நேரங்களில் எரிந்து கொண்டிருப்பதும் வழக்கம். இந்நிலையில் சாலையோரம் எரிந்துகொண்டிருந்த குப்பையில் தலை, கைகள் இல்லாமல் சடலம் ஆண் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு சென்றனர். குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து, அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.