Skip to main content

அண்ணா பல்கலைக்கழகம் புதிய அரியர் விதி...

Published on 30/01/2019 | Edited on 30/01/2019


 

anna university

 

பொறியியல் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அரியர் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்


2017ல் வெளியான புதிய தேர்வு முறைப்படி, முதல் பருவத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாவிட்டால், அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது. ஓராண்டு காத்திருந்து மூன்றாவது பருவத்தில்தான் எழுத முடியும். இந்த புதிய கட்டுப்பாட்டால், நடப்பு கல்வியாண்டிற்குள் அனைத்து பாடத் தேர்வுகளிலும் தேர்ச்ச பெற முடியாது எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டு, 2017 தேர்வு நடைமுறைகளில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தோல்வியடைந்த தேர்வை, அடுத்தடுத்த செமஸ்டர்களில் எழுதலாம். அதேநேரம் வரும் கல்வியாண்டில் ஒரு புதிய கொள்கையும் வெளியிடப்பட உள்ளது. அதன்படி 2019-20-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள், இனி முதலாம் ஆண்டு, முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் இருந்தால் மட்டுமே 4வது ஆண்டில் பயில அனுமதிக்கப்படுவர். என தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்