சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பொன்னம்பலம் நகரில், கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ 26 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பூங்கா மற்றும் அதன் அருகிலேயே 29-வது வார்டில் ரூ 20 லட்சம் செலவில் நடைபாதை வசதிகளுடன் அமைக்கப்பட்ட காரைக்குட்டை குளத்தை நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று(10.2.2025) மாலை திறந்து வைத்தார்.
அப்போது, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் மல்லிகா, மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், மணிகண்டன், வெங்கடேசன், அப்புசந்திரசேகர். 28-வது வார்டு உறுப்பினர் கேமதிசேகர், 29-வார்டு உறுப்பினர் சுனிதா மாரியப்பன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
குளம் மற்றும் பூங்காவில் பேவர் பிளாக் கல் பதித்து நடைபாதை, சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு அமரும் வகையில் நாற்காலிகள் அமைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது.