Skip to main content

"அதிமுகவின் கதை அக்காவைக் கொடுத்து பேக்கரி வாங்கிய கதை..." - இயக்குனர் அமீர் கிண்டல்

Published on 02/05/2019 | Edited on 03/05/2019

சென்னை கவிக்கோ அரங்கில் 'தாய்க்குத் தாலாட்டு இசைப்பாடல்' வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மு.மேத்தா எழுதிய இந்தப் பாடலுக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், மனிதநேய மக்கள் கட்சி ஜூவாஹிருல்லா, இயக்குனர் அமீர், பேராசிரியர் ஹாஜாகனி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய ஹாஜாகனி, தனது பேச்சினூடே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என பெயர் மாற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டு "பெயரை சொல்லி முடிப்பதற்குள் அடுத்த நிலையம் வந்துவிடும்" என்று கூறினார்.

 

ameer



பின்னர் இயக்குனர் அமீர் பேசிய போது, ஹாஜாகனியின் பேச்சைக் குறிப்பிட்டு, "அந்தப் பெயர் மாற்றத்துக்குப் பின்னே ஒரு அரசியல் இருக்கிறது. நகைச்சுவையா சொல்லணும்னா ஒரு படத்தில் வடிவேலு பேசுற ஒரு வசனம் இருக்கும். 'இந்த பேக்கரிய எப்படி வாங்குன?'னு கேட்டா, 'அக்காவை கொடுத்துட்டு பேக்கரிய வாங்கிட்டேன்'னு சொல்லுவார். அது மாதிரி ரயில் நிலையத்துக்கு இந்தப் பெயரைக் கொடுத்துட்டு கட்சியை வாங்கிட்டாங்க. அதை அதிமுககாரங்க பெருமையா வேற சொல்லிக்கிறாங்க. ரயில்நிலையத்துக்கு அந்தப் பெயரைக் கொடுத்துட்டு அதிமுக பேனர்ல இருந்த எம்,.ஜி.ஆரை எடுத்துட்டு மோடி படத்தை போட்டுட்டாங்க" என்று கூறினார்.   

 

 

சார்ந்த செய்திகள்