அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேலையில்லா பட்டதாரிகள், சிறு மற்றும் குறுந்தொழில் மலர் வியபாரிகளுக்கு பூங்கொத்து(பொக்கை) மற்றும் மலர் அலங்காரம் குறித்து பயிற்சி கொடுத்தனர். பயிற்சியில் பங்கேற்றவர்களை வேளாண் மாணவ பிரதிநிதி யாழினி வரவேற்றார். பயிற்சியை பல்கலைக்கழக வேளாண்துறை இணைபேராசிரியர் ராஜ்பிரவின் துவக்கிவைத்தார்.
சி.முட்லூர் கிளை பாரத வங்கி மேலாளர் ரஞ்சன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் சாகுபடிக்குறிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேசினார். இதனைதொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட கிளாடியோலஸ் மலர்குறித்து கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
பின்னர் கிளாடியோலஸ் மலர் சாகுபடி விவசாயிகள் சீனிவாசப்பெருமாள், கணேசன் ஆகியோர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து சிறப்பாக மலர் கொத்துகள் செய்த மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் வேளாண் உதவி பேராசிரியர் சிவசக்தி, பள்ளி ஆசிரியர் சாந்தி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.