தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள், கோயில்கள், கடற்கரைகள் முதலியன நோய்தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திரையரங்குளில் 50 சதவீத பார்வையாளர்கள், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மேலும் சில கட்டுப்பாடுகளை வழங்கக்கோரி அரசிடம் தொடர் கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் நாளை ஆலோசனை செய்ய உள்ளார். மருத்துவர்களுடன் முதல்வர் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாட உள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை தினசரி குறைந்து வருவதால் திரையரங்குகளில் மீண்டும் 100 சதவீத இருக்கைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.