![actor soori case actor vishnu vishal father chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/4eCj-yQmHyVp_ZUBhCuRJmDLJVdqcLk0n9KNjGcj8cs/1603506540/sites/default/files/inline-images/madras5633_36.jpg)
நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ‘வீரதீர சூரன்‘ என்ற திரைப்படத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்குப் பதில், சிறுசேரியில் ஒரு நிலத்தைத் தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலாவும் கூறியுள்ளனர். அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியைக் கூடுதலாகப் பெற்று மோசடி செய்து விட்டதாக, நடிகர் சூரி காவல்துறையிடம் புகார் செய்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை, தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், போலீசார் தங்களைக் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.