Skip to main content

''எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதியில்லை''- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

'' 120 uzhavar market, 24 semmozhi Parks '' - Agriculture Minister MRK Panneer Selvam Information!

 

கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருடனே முக்கிய அமைச்சர்கள் 33 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு புதிய வளர்ச்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''தோட்டக்கலை துறை சார்பில் தமிழகத்தில் 24 செம்மொழி பூங்காக்கள் உருவாக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும். செம்மொழி பூங்கா, உழவர்சந்தை போன்றவை முறையாக பராமரிக்கப்படவில்லை'' என தெரிவித்தார். அதேபோல் எட்டு வழி சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சம்பா மகசூல் இழப்பீடு 560 கோடி ரூபாய் - தமிழக அரசு அறிவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

nn


சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாகத் தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழு லட்சம் ஏக்கர் சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது' எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2022-23 ஆம் ஆண்டில் சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 181 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கி உள்ளது.  இந்த நிலையில் தற்போது 560 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 6 லட்சம் தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

ஜூன் 3ல் செம்மொழிப் பூங்காவில் முக்கிய நிகழ்வு; இரண்டாவது ஆண்டாகத் தமிழக அரசு முன்னெடுப்பு

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Main event at Semmozhi Park on June 3; This is the second year that the Tamil Nadu government has taken the initiative

 

செம்மொழிப் பூங்கா, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். இந்த பூங்காவை 24 நவம்பர் 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழி பூங்காவை அமைத்தது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் செம்மொழிப் பூங்காவில் ஜூன் 3 ஆம் தேதி மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 3 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 2 நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. பெங்களூர், உதகை, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளைக் கொண்டு இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் 2 ஆவது ஆண்டாக மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் என்றும் தோட்டக்கலைத்துறை கூறியுள்ளது. மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமும் பெரியவர்களுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணமும் நிர்ணயித்திருப்பதாகத் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.