Skip to main content

டாஸ்மாக் பார்களுக்கு சீல்...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினாலும் படிப்படியாக மூடப்படும் என்று வெளிப்படையாக சொன்னாலும் மூடிய கடைகளை சத்தமில்லாமல் திறந்து வியாபாரம் நடக்கிறது.
 

tasmac

 

 

டாஸ்மாக் கடை ஒரு பக்கம் என்றால் பெட்டிக்கடை, ஓட்டல்களிலும் டாஸ்மாக் மது விற்பனை வேகமாகவே உள்ளது. டாஸ்மாக்ல வாங்குற சாராயம் எங்கே வித்தாலும் விடுங்க ஆனா பாண்டிச்சேரி சாராயம், சொந்த தயாரிப்புகளை மட்டும் பிடிங்க என்று வாய்மொழி உத்தரவுகள் உள்ளதால் பெட்டிக்கடை வியாபாரத்திற்கு மாமூல் அனுமதியுடன் இயங்கி வருகிறது.
 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் பார்களுக்கு அனுமதி பெறாமலேயே ஆளுங்கட்சியினர் பார்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு என்பது இல்லை. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இரட்டிப்பு வருமானமாக கிடைத்தது.

இந்த நிலையில் தான் சிலர் நீதிமன்றம் போய் பார் அனுமதியே இல்லாமல் பார் நடத்த அனுமதித்துள்ளதால் அரசு வருவாய் குறைகிறது என்று மனுத்தாக்கல் செய்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் டெண்டர் நடந்தது. டெண்டர் விண்ணப்பம் அந்தந்த ஒன்றிய அதிமுக செயலாளர்களே கொடுத்தனர். ஒரு சிலர் மட்டும் நீதிமன்றம் மூலம் விண்ணப்பம் பெற்றனர்.
திட்டமிட்டபடியே டெண்டர் நடந்தாலும் டெண்டர் வைப்புத் தொகையோடு முன்வைப்புத் தொகையை செலுத்தாமலேயே பல பார்களும் இயங்குகிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக கண்காணிக்க வந்த பறக்கும்படை அதிகாரி மதுரை உதவி கலெக்டர் பாஸ்கரன் புதுக்கோட்டை நகரில் சில பார்களுக்கு பூட்டி சீல் வைத்தார். இதைப் பார்த்து மற்ற பார்காரர்கள் இன்னும் சில நாட்களில் டெண்டர் தொகை கட்ட முன்வந்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்