
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவரை மறைமுக தேர்தல் மூலமாக அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 14 மாவட்ட கவுன்சிலர்களை திமுகவே கைப்பற்றியிருந்தது. மாவட்டக்குழு தலைவர் பதவிக்கு திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சூர்யகுமார், மகளிரணி செயலாளர் கவிதாதண்டபாணி இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இருவரும் வேட்புமனுதாக்கல் செய்தனர். நடைபெற்ற மறைமுக தேர்தலில் சூர்யகுமார் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக போட்டியின்றி ப்ரியதர்ஷினி ஞானவேலன் வெற்றி பெற்றார்.
மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில் வெற்றிபெற்றவர்கள் விவரம்



திருப்பத்தூர்- விஜயாஅருணாச்சலம், ஜோலார்பேட்டை - சத்தியாசதிஷ்குமார், கந்திலி-திருமுருகன் உள்ளிட்டோர் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, கந்திலி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது. 6 ஒன்றியத்திலும் திமுகவே வெற்றி பெற்றது.