காடுவெட்டி தியாகராஜன் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என, 'புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவை' நிறுவனத் தலைவர் சூரியபாலு தெரிவித்துள்ளார்.
திருச்சி தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராகன், வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர், தான் பேசியது தவறு என்று கூறி வெள்ளாளர் சங்கக் கூட்டத்தில் பொது மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இந்நிலையில், புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவை சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சூரியபாலு பேசுகையில், திட்டமிட்டு ஒரு சமூக மோதலை ஏற்படுத்தும் விதமாக காடுவெட்டி தியாகராஜன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றும், எங்கள் முத்தரையர் சமூகம் சார்ந்து இப்பிரச்சனை திரும்பியுள்ளது. இது எங்களுக்கும் எங்கள் முசிறி பகுதியில் உள்ள மற்ற சமூகத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த மோதல் தமிழகம் முழுவதும் பரவவிடாமல் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.