Skip to main content

விஜயகாந்த் சொத்து ஏலம் என்ன ஆனது?

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம் விட போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினர் மத்தியிலும், தேமுதிக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதாவது, வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரி, வீடு உள்ளிட்ட சொத்துக்களை வங்கி ஏலத்திற்கு விடுவதாக வாங்கி நிர்வாகம் அறிவித்தது. அப்போது தேமுதிக நிர்வாகிகளை அழைத்து பிரேமலதா கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளிடம் நிதி வேண்டும் என்றும் தேமுதிக தலைமை கூறியதாக சொல்லப்பட்டது. 

 

dmdk



தேமுதிக தலைமை கூறிய முடிவால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் மாற்று கட்சியில் இணைந்தனர். மேலும் வங்கியில் வாங்கிய கடனை சீக்கிரம் அடைப்பதாக விஜய்காந்த்தின் மனைவி பிரேமலதா தெரிவித்தார். இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியாக ஒரு கோடி ரூபாயை வங்கியில் செலுத்தியதாக சொல்லப்படுகிறது. அதோடு மீதமிருக்கும் தொகையையும் சீக்கிரம் கட்டி விடுவதாக வங்கியில் உறுதியளித்தாக நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனால் தற்போதைக்கு விஜயகாந்த் சொத்து ஏலம் விடும் பிரச்னை தற்போதைக்கு இல்லை என்று சொல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்