Published on 16/04/2019 | Edited on 16/04/2019
அண்ணா திராவிட கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, அமமுக, அண்ணா திராவிட கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணையும். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பணம் பட்டுவாடா செய்ய ஆம்புலன்ஸில் பணம் போய்க்கொண்டிருக்கிறது. போலீஸ் ஜீப்பில் பணம் போய்க்கொண்டிருக்கிறது. போலீஸ் வேனில் பணம் போய்க்கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது வெறும் கண்துடைப்பு நாடகம். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதிமுகவினரே மணல் ஏற்றுமதி செய்கின்றனர் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது என்றார்.